Wednesday, December 31, 2014

ஆச்சரிய உணர்சிகள் - Exclamation



  • ஆங்கிலத்தில் மனதின் வெவ்வேறு உணர்சிகளை வெளிபடுத்த அதற்கென்றே தனி முறை உண்டு. அது எளிமையானது மற்றும் அழகானது. ஆச்சரியம் சந்தோசம் கோபம் மற்றும் பிற பாவங்களை சின்ன சின்ன வாக்கியங்கள் மற்றும் இரண்டு- மூன்று சொற்களில் மிக சிறப்பான விதத்தில் கூற இயலும். இச்சொற்கள் மற்றும் வாக்கியங்களை நாம் சாதாரண நடைமுறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். 

சில ஆச்சரிய உணர்சிகள் (Exclamation): 

    • Marvelous ! - ஓஹோ ! ஆஹா 
    • Well Done ! - சபாஷ் 
    • Beautiful ! - என்ன அழகு 
    • Hey ! - ஏய் 
    • Wow ! - அடடே 
    • My/oh god - அட கடவுளே 
    • Wonderful - பிராமாதம் 
    • Of course - சந்தேகமில்லாமல் 
    • Thank You - நன்றி 
    • By god grace - கடவுள் அருள் 
    •  May god bless you ! - கடவுள் உங்களுக்கு ஆசி வழங்கட்டும் 
    • Same to you ! - உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் 
    • Excellent ! - மிகவும் சிறப்பு 
    • How sad ! - அட பாவமே 
    • That is good news ! - மிகவும் சந்தோசமான விஷயம் 
    • What a great victory ! - என்ன பிரமாதமான வெற்றி 
    • Good heavens ! - அட தெய்வமே 
    • Hello ! Liston ! - ஐய்யா சற்று கவனிக்கவும் 
    • Hurry up Please ! - சீக்கிரம் செல்லுங்கள் 
    • How terrible ! - எவ்வளவு பயங்கரம் 
    • How disgraceful ! - எவ்வளவு மானக்கேடு 
    • How Absurd ! - எவ்வளவு மோசம் 
    • How dare he ! - அவனுக்கு என்ன துணிச்சல் 
    • How Sweet ! - எவ்வளவு இனிமை 
    • How lovely ! - எவ்வளவு அழகு 
    • How dare you say that ! - அப்படி சொல்ல உனக்கு என்ன தைரியம் 
    • Oh dear ! - என் கண்ணே 
    • Hurry up ! - சீக்கிரம் 
    • Quit please / Please keep quit ! - தயவு செய்து அமைதியாக / நிசப்தமாக இருக்கவும்  
    • Yes it is ! - ஆமாம் அப்படிதான் 
    • Really ! - உண்மையாகவா 
    • Is it ! - அப்படியா 
    • Thanks ! - நன்றி 
    • Thank You ! - உங்களுக்கு நன்றி  
    • Thank god ! - கடவுளுக்கு நன்றி 
    • Many Happy returns of the day ! - இந்நாள் மீண்டும் மீண்டும் வரட்டும் 
    • Hurrrh I have won ! - ஓ நான் வென்று விட்டேன் 
    • For your good health ! - உங்கள் ஆரோக்கியத்திற்காக 
    • Congratulation ! - வாழ்த்துகள் 
    • What nonsense ! - என்ன அபத்தம் 
    • What a shame ! - என்ன வெட்ககேடு 
    • How tragic ! - எவ்வளவு துக்கரகம் 
    • What pleasant surprise ! - என்ன ஆச்சரியம் 
    • wonderful ! - ஆச்சரியம் 
    • How disgusting !  - எவ்வளவு அருவெறுப்பு 
    • Beware ! - ஜாக்கிரதை 
    • What a Pity ! - ஐயோ பாவம் 
    • What an idea ! - என்ன பிரமாதமான யோசனை 
    • Welcome sir ! - நல்வரவு 
    • Cheers ! - உங்கள் நல்வரவுக்காக 
    • What a bother ! - என்ன கஷ்டம் 
    • Watch out ! - எச்சரிக்கையுடன் 
    • Touch wood ! - கண்ணு படப்போகுது 
    • Come what may ! - என்ன வந்தாலும் சரி 
  • சாதாரண வாக்கியத்தில் காற்புள்ளி(,) அல்லது முற்றுபுள்ளி (.) வைக்கும் இடத்தில் ஆச்சரியத்தை வெளிபடுத்தும் போது ஆச்சரிய குறி (!) வைக்க வேண்டும். ஆங்கிலத்தில் இதை Exclamatory sign என்பார்கள்.
  •  ஆச்சரியம், மடமை, வருத்தம், கோபம், இப்படி அநேக பாவங்களை வெளிபடுத்த What, How போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். Ex. What a shame! How wonderful !
  • ஆச்சரிய குறி வாக்கியங்களில்(Exclamatory sentence) உச்சரிப்பில் அதன் அதன் கருத்து தோன்ற குரலில் மாற்றம் இருக்க வேண்டும்.    

    Tuesday, December 30, 2014

    சில உபசார வார்த்தைகள் - Some Polite Phrases

    • I’m Sorry, I Couldn't make it that day - நான் அன்றைய தினம் வர முடியாதமைக்கு மன்னிக்கவும் 
    • I’m sorry, i Could’t make it time - நான் குறிப்பிட்ட சமயத்தில் என்னால் வர முடியவில்லை என்னை மன்னிப்பீர்களா 
    • I’m Sorry, I got little late - மன்னிக்கவும் எனக்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது 
    • Please convey my apologies - என் சார்பில் மன்னிப்பு கோறவும் 
    • It was all by mistake. Please excuse me - அது என் தவறு. மன்னிக்கவும் 
    • I am very sorry - என்னை மன்னிக்கவும் 
    • Sorry to have disturbed you - உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும் 
    • I beg your pardon - மன்னிக்கவும் 
    • May i have your attention, please? - தயவு செய்து கவனிப்பீர்களா 
    • Allow me to say - என்னை சொல்ல விடுங்கள் 
    • It’s all yours - இதை தங்களுடையதாக கருதவும் 
    • Will you please permit to speak? - தாங்கள் எனக்கு பேச அனுமதி தாருங்கள் 
    • Let me also help you - என்னையும் உதவ அனுமதியுங்கள் 
    • Will you please move a bit? - கொஞ்சம் நகர முடியுமா 
    • Will you speak slowly? - கொஞ்சம் மெதுவாக பேசுகிறீர்களா 
    • Will you mind speaking a bit softly, please? - தயவு செய்து மெல்லிய குரலில் பேசவும் 
    • Sorry for the inconvenience - இடையுறுக்கு வருந்துகிறேன் 
    •  Will You please let me sit? - தயவு செய்து என்னை உட்கார விடுங்கள் 
    • Could you spare few movement for me? - நீங்கள் எனக்காக சிறிது நேரம் ஒதுக்க முடியுமா 
    • As you please - உங்கள் விருப்பம் 
    • Please make yourself comfortable - சௌகரியமாக உட்காருங்கள் 
    • That’s very/ so kind of you - உங்கள் ஆசீர்வாதம்/ உங்கள் கிருமி 
    • please help yourself - எடுத்துகொள்ளுங்கள் 
    • gland to meet you - உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி 
    • Thanks for your kind valuable advice - உங்கள் அறிவுரைக்கு நன்றி 
    • I will try my level best - நான் இயன்ற அளவு முயற்சிப்பேன் 
    • Hope you are enjoying yourself/ yourselves -  நீங்கள் சிறப்பாக அனுபவிக்கீறிர்கள் என்று நம்புகிறேன் 

    நினைவில் வையுங்கள் : 

    • ஒவ்வொரு தேசத்திலும் அதன் தன் சம்பரதயப்படியும் மரியாதை தெரிவிக்கும் முறைபடியும் உபசார முறைகள் இருக்கும். நாம் தமிழில் ஒருவர் பெயருக்கு பின் ‘அவர்கள்’ என்று மரியாதையுடன் இணைக்கிறோம். அதே போல மரியாதை தெரிவிக்கும் வகையில் பன்மையில் வாக்கியம் அமைப்போம். ஆனால் ஆங்கிலத்தில் மரியாதையுடன் கூட (singular) ஒருமை வாக்கியம் ஆனது அமையும். Ex. Mr. Sam has come.
    • தமிழில் முன்னிலையில் நீ என்பதற்கு மரியாதையாக தாங்கள் என்று கூறுவது வழக்கம் ஆனால் ஆங்கிலத்தில் நீ நீங்கள் என்பதற்கு You என்று மட்டும் தான் கூறுவார்கள். தங்களுக்கு என்ன வேண்டும்  What you want? இதே போல் தமிழ் படர்கையில் ‘அவன்’ என்னும் இடத்தில அவர்கள் என்று சொன்னாலும் ஆங்கிலத்தில் ஒருமையிலே கூறப்படும். அவர் இரவு வரக்கூடும் He may come at night.

    மன்னிப்பு கேட்டு கொள்ள ஆங்கிலத்தில் பல சொற்கள் பயன்படுகின்றன அச்சொற்களின் சரியான பொருள் இங்கே தரப்பட்டுள்ளது.
    1.      Excuse (V*) – மன்னிக்கவும். please excuse me
    2.      Forgive (V) – கருணை. To err is human, to forgive is divine.
    3.      Pardon (V) – குற்றத்தின் தண்டனையிலிருந்து விடுபடுதல் Please pardon me for my mistake.
    4.      Mistake (V) – இல்லாததை தவறாக புரிந்து கொள்ளல் Don’t mistake me for a doctor
    5.      Sorry (V) தவறை ஒப்புகொள்ளல் (Am Sorry for being late.)
    • இந்த கால கட்டத்தில் சாதரணமாக I beg your pardon என்பது மிக சாதரணமாக வழக்கத்தில் உள்ளன போனில் பேசுவது காதில் விழவில்லை என்றால் நீங்கள் I beg your pardon அல்லது pardon என்று கூறுவீர்கள் இதிலிருந்து பேசுவற்கு தான் சரியாக பேசினாலும் உங்களுக்கு காதில் விழவில்லை என்று புரிந்து விடும் தயவு செய்து மறுபடியும் கூறுங்கள் please repeat it என்றும் சொல்லலாம். ஆனால் முதலில் கூறப்பட்ட சொற்றொடரின் கருதாய் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.
    (V என்பதற்கு 'வினை' verb என்று பொருள்)

    ஆங்கிலத்தில் உபசார வார்த்தைகள் - good manners in English


    • தமிழில் நீங்கள், தாங்கள் என்றும் அவன் அவர் அவர்கள் என்ற மரியாதை நிலைக்கு ஏற்ப குறிப்பது ஆங்கிலத்தில் கிடையாது. சில சமயங்களில் நாம் நம்மை பற்றி கூறி கொள்ளும் போது 'நான்' என்பதற்கு பதில் நாம் என்று உபயோகிக்கிறோம். இவ்வித பழக்கம் ஆங்கிலத்தில் இல்லை எல்லா வயதினரிடதிலும் you  என்றே கூற வேண்டும் . 
    • கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில சொற்களை நன்றாக மனப்பாடம் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த சொற்களில் ஆங்கில இனத்தவரின் ஒழுக்க நடைமுறை முழுவதுமாக இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழி உபசார முறைகளை குறிக்கும் முக்கியமானவையாகும். 
      • Please, Allow Me, That is alright
      • Thanks,  After You, It's my pleasure 
      • Welcome,  Sorry 
      • Kindly, Excuse me
      • Allow Me,   Pardon    
    • ஒருவரிடம் பேனா கேட்பதினாலும் ஒரு டம்பளர் தண்ணீர் கேட்பதினாலும் நேரம் விசாரிக்கும் போதும் அல்லது நீங்கள் ஒருவர் கேட்டதற்கு 'ஆம்' என்று பதில் கூறும் போதும் வாக்கியத்தில் Please என்ற வார்த்தையை சேர்த்து கொள்ள வேண்டும். ஆம்(yes) என்பதற்கு சில சமயங்களில் please என்ற வார்த்தையை கூறினாலும் போதும். 
    •     ஆனால் Please அல்லது kindly என்பது போன்ற வார்த்தைகள் போன்ற வார்த்தைகள் உபயோகபத்டுதாமல் போனால் அநாகரிகமாகும்.  கீழ்கண்ட வார்த்தைகளை கவனியுங்கள். 
      • கொஞ்சம் பேனா கொடுங்கள் -Give me your pen 
      •  ஒரு டம்பளர் தண்ணீர் கொடுங்கள் - Give me a glass of water 
      • சரி குடிக்கிறேன் - Yes please 
      • நேரம் என்ன - What is the time?  
    • இதை கீழ்க்கண்டவாறும் கூறலாம்: 
      •  May I borrow your pen, please ? 
      • Give me a glass of water, Please ? 
      • What is the Time, Please?   
      • இவ்வாறு கூறினால் நீங்கள் மரியாதை தெரிந்தவர் என்று கேட்பவர் புரிந்து கொள்வார் 
    •   யாரவது சிறிய உதவி செய்தாலும் உதாரணமாக நீங்கள் நேரம் அல்லது ஒருவர் விலாசம் கேட்டு அவர் பதில் அளித்ததும் அவருக்கும் thank you (நன்றி) கூற மறக்கதிர்கள். சுருக்கமாக Thanks என்றும் கூறலாம்.  
      • Ex.    Many Many Thanks to You
      • Thank You Very Much.  என்றும் கூறலாம். 
    • ஒருவர் ஒரு பொருளை கொஞ்சம் எடுத்து கொள்ளும்படி கூற நீங்கள் எடுத்து கொள்ள விரும்பவில்லை என்றால் No, Thanks என்று கூறுங்கள். 
    •   நீங்கள் ஒருவருக்கு சிறு உதவி செய்து அவர் உங்களுக்கு thank you என்றால் ஆங்கிலத்தில் இத்துடன் பேச்சு ஆனது முடியவில்லை 'Thank you' என்று சொன்ன பிறகு நீங்கள் பேசாமல் இருந்தால் நாகரிகம் தெரியாதவர் என்று பொருள் ஆகிவிடும். thank you என்று கூறியவுடன் கீழ்கண்ட வார்த்தைகளில் பொருளுக்கு ஏற்ப கூற வேண்டும். 
      • It's all right - எல்லாம் சரி 
      • No Mention - பரவாயில்லை 
      • It's Fine - சரி 
      • My pleasure - எனக்கு மகிழ்ச்சி 
      • Welcome/ you're Welcome - மீண்டும் உதவ கருதுகிறேன்     
    • மேலே சொன்ன ஐந்து பதில்களில்களும் மிக பவ்யமாக சொல்லபடுகிறது.  இதில் ஐந்தாவது இரு முறைகளும் அதிகம் பயன்படுத்தபடுபவை 
    • எவரேனும் உங்களை ஒரு பொருள் கேட்டு அதை நீங்கள் கொடுப்பதாக இருந்தால் வாங்கி கொள்ளுங்கள் என்று தமிழில் கூறுகிறோம். அதையே ஆங்கிலத்தில் 'take it' என்று  கூறினால் மரியாதை தெரியாது என்றாகும். ஆதலால் நீங்கள் yes, you are welcome என்றோ அல்லது with great pleasure. என்று கூற வேண்டும் .
    • நீங்கள் எவருக்கேனும் உதவி செய்ய விரும்பினால் அதை ஆங்கிலத்தில் கூற தனி முறை உண்டு. ஒரு பெண்ணிடம் இருக்கும் குழந்தையை நீங்கள் சற்று எடுத்துக்கொண்டு உதவ விரும்பினாலோ அல்லது ஒரு வயதானவரின் சுமையை தூக்க விரும்பினாலோ நீங்கள் Allow me அதாவது எனக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள் அல்லது may i help you?  என்று கூறி உங்களை கவர வைக்க வேண்டும்     
    • நீங்கள் ஒரு பெண்மைக்கோ அல்லது வயதானவருக்கோ முதலில் வழி விட விரும்பினால் தமிழில் 'நீங்கள் முதலில்' என்று கூறுகிறோம். அதையே First you என்று ஆங்கிலத்தில் கூறுவதில்லை. உங்களுக்கு பிறகு நான் எனும் பொருள் படி After you என்றே கூற வேண்டும். 
    • பேச்சிக்கிடையில் சிறிய விசயங்களுக்கு கூட 'வருத்தம்' அல்லது மன்னிப்பு கேட்பது ஆங்கில வழக்கம். நம்மிலும் இவ்வழக்கம் உள்ளது. ஆனால் உண்மையில் நாம் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் மட்டுமே வருத்தம் தெரிவிப்போம். அந்த சமயங்களில் கீழே உள்ள வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். 
      • Sorry 
      • Excuse me
      • Pardon     
    • யார் மேலாவது திடீர் என கை பட்டால் அல்லது தெரியாமல் இடித்துவிட்டாலோ உடனே sorry என்று கூற வேண்டும்.  
    •  வழியில் இருவர் நின்று பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் இடையில் குறுக்கிட்டு செல்ல வேண்டுமானால் Excuse me என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். அதே போல ஒரு கூட்டத்தின் போது வெளியே எழுந்து செல்ல வேண்டுமானால் இந்த வார்த்தையையே பயன்படுத்த வேண்டும் 
    •   ஒருவருடன் நேரிலோ அல்லது டெலிபோனிலோ பேசும் போது மற்றவர் கூறும் போது சரியாக கேட்கவில்லை எனில் 'Speak loudly' என்று கூற வேண்டும். அதே போல அவர் கூறியது சரியாக புரியாமல் இருந்தால் அல்லது இன்னொரு முறை கூறுங்கள் என்பதை 'pardon' என்று ஆங்கிலத்தில் கூற வேண்டும். 
    • ஒருவர் தனி அறையில் இருக்கும் போது அவரை பார்க்க அவர் வீட்டுக்கு செல்ல நேர்ந்தால் முன் எச்சரிக்கை செய்யாமல் அல்லது கேட்காமல் உள்ளே போக கூடாது. ஆங்கிலத்தில் May i come in please என்று அனுமதி கேட்டே உள்ளே செல்ல வேண்டும்.  
    • மேற்கண்டவை தான் ஆங்கிலத்தில் உபசார மரியாதையான பதங்கள் நீங்கள் வாக்கியங்களை அமைக்கும் போது ஆங்கிலத்தின் இயற்கை தன்மையை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.