ஆங்கிலத்தில் உபசார வார்த்தைகள் - good manners in English
- தமிழில் நீங்கள், தாங்கள் என்றும் அவன் அவர் அவர்கள் என்ற மரியாதை நிலைக்கு ஏற்ப குறிப்பது ஆங்கிலத்தில் கிடையாது. சில சமயங்களில் நாம் நம்மை பற்றி கூறி கொள்ளும் போது 'நான்' என்பதற்கு பதில் நாம் என்று உபயோகிக்கிறோம். இவ்வித பழக்கம் ஆங்கிலத்தில் இல்லை எல்லா வயதினரிடதிலும் you என்றே கூற வேண்டும் .
- கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில சொற்களை நன்றாக மனப்பாடம் செய்து வைத்து கொள்ளுங்கள். இந்த சொற்களில் ஆங்கில இனத்தவரின் ஒழுக்க நடைமுறை முழுவதுமாக இடம்பெற்றுள்ளது. ஆங்கில மொழி உபசார முறைகளை குறிக்கும் முக்கியமானவையாகும்.
- Please, Allow Me, That is alright
- Thanks, After You, It's my pleasure
- Welcome, Sorry
- Kindly, Excuse me
- Allow Me, Pardon
- ஒருவரிடம் பேனா கேட்பதினாலும் ஒரு டம்பளர் தண்ணீர் கேட்பதினாலும் நேரம் விசாரிக்கும் போதும் அல்லது நீங்கள் ஒருவர் கேட்டதற்கு 'ஆம்' என்று பதில் கூறும் போதும் வாக்கியத்தில் Please என்ற வார்த்தையை சேர்த்து கொள்ள வேண்டும். ஆம்(yes) என்பதற்கு சில சமயங்களில் please என்ற வார்த்தையை கூறினாலும் போதும்.
- ஆனால் Please அல்லது kindly என்பது போன்ற வார்த்தைகள் போன்ற வார்த்தைகள் உபயோகபத்டுதாமல் போனால் அநாகரிகமாகும். கீழ்கண்ட வார்த்தைகளை கவனியுங்கள்.
- கொஞ்சம் பேனா கொடுங்கள் -Give me your pen
- ஒரு டம்பளர் தண்ணீர் கொடுங்கள் - Give me a glass of water
- சரி குடிக்கிறேன் - Yes please
- நேரம் என்ன - What is the time?
- இதை கீழ்க்கண்டவாறும் கூறலாம்:
- May I borrow your pen, please ?
- Give me a glass of water, Please ?
- What is the Time, Please?
- இவ்வாறு கூறினால் நீங்கள் மரியாதை தெரிந்தவர் என்று கேட்பவர் புரிந்து கொள்வார்
- யாரவது சிறிய உதவி செய்தாலும் உதாரணமாக நீங்கள் நேரம் அல்லது ஒருவர் விலாசம் கேட்டு அவர் பதில் அளித்ததும் அவருக்கும் thank you (நன்றி) கூற மறக்கதிர்கள். சுருக்கமாக Thanks என்றும் கூறலாம்.
- Ex. Many Many Thanks to You
- Thank You Very Much. என்றும் கூறலாம்.
- ஒருவர் ஒரு பொருளை கொஞ்சம் எடுத்து கொள்ளும்படி கூற நீங்கள் எடுத்து கொள்ள விரும்பவில்லை என்றால் No, Thanks என்று கூறுங்கள்.
- நீங்கள் ஒருவருக்கு சிறு உதவி செய்து அவர் உங்களுக்கு thank you என்றால் ஆங்கிலத்தில் இத்துடன் பேச்சு ஆனது முடியவில்லை 'Thank you' என்று சொன்ன பிறகு நீங்கள் பேசாமல் இருந்தால் நாகரிகம் தெரியாதவர் என்று பொருள் ஆகிவிடும். thank you என்று கூறியவுடன் கீழ்கண்ட வார்த்தைகளில் பொருளுக்கு ஏற்ப கூற வேண்டும்.
- It's all right - எல்லாம் சரி
- No Mention - பரவாயில்லை
- It's Fine - சரி
- My pleasure - எனக்கு மகிழ்ச்சி
- Welcome/ you're Welcome - மீண்டும் உதவ கருதுகிறேன்
- மேலே சொன்ன ஐந்து பதில்களில்களும் மிக பவ்யமாக சொல்லபடுகிறது. இதில் ஐந்தாவது இரு முறைகளும் அதிகம் பயன்படுத்தபடுபவை
- எவரேனும் உங்களை ஒரு பொருள் கேட்டு அதை நீங்கள் கொடுப்பதாக இருந்தால் வாங்கி கொள்ளுங்கள் என்று தமிழில் கூறுகிறோம். அதையே ஆங்கிலத்தில் 'take it' என்று கூறினால் மரியாதை தெரியாது என்றாகும். ஆதலால் நீங்கள் yes, you are welcome என்றோ அல்லது with great pleasure. என்று கூற வேண்டும் .
- நீங்கள் எவருக்கேனும் உதவி செய்ய விரும்பினால் அதை ஆங்கிலத்தில் கூற தனி முறை உண்டு. ஒரு பெண்ணிடம் இருக்கும் குழந்தையை நீங்கள் சற்று எடுத்துக்கொண்டு உதவ விரும்பினாலோ அல்லது ஒரு வயதானவரின் சுமையை தூக்க விரும்பினாலோ நீங்கள் Allow me அதாவது எனக்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள் அல்லது may i help you? என்று கூறி உங்களை கவர வைக்க வேண்டும்
- நீங்கள் ஒரு பெண்மைக்கோ அல்லது வயதானவருக்கோ முதலில் வழி விட விரும்பினால் தமிழில் 'நீங்கள் முதலில்' என்று கூறுகிறோம். அதையே First you என்று ஆங்கிலத்தில் கூறுவதில்லை. உங்களுக்கு பிறகு நான் எனும் பொருள் படி After you என்றே கூற வேண்டும்.
- பேச்சிக்கிடையில் சிறிய விசயங்களுக்கு கூட 'வருத்தம்' அல்லது மன்னிப்பு கேட்பது ஆங்கில வழக்கம். நம்மிலும் இவ்வழக்கம் உள்ளது. ஆனால் உண்மையில் நாம் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் மட்டுமே வருத்தம் தெரிவிப்போம். அந்த சமயங்களில் கீழே உள்ள வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
- யார் மேலாவது திடீர் என கை பட்டால் அல்லது தெரியாமல் இடித்துவிட்டாலோ உடனே sorry என்று கூற வேண்டும்.
- வழியில் இருவர் நின்று பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் இடையில் குறுக்கிட்டு செல்ல வேண்டுமானால் Excuse me என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும். அதே போல ஒரு கூட்டத்தின் போது வெளியே எழுந்து செல்ல வேண்டுமானால் இந்த வார்த்தையையே பயன்படுத்த வேண்டும்
- ஒருவருடன் நேரிலோ அல்லது டெலிபோனிலோ பேசும் போது மற்றவர் கூறும் போது சரியாக கேட்கவில்லை எனில் 'Speak loudly' என்று கூற வேண்டும். அதே போல அவர் கூறியது சரியாக புரியாமல் இருந்தால் அல்லது இன்னொரு முறை கூறுங்கள் என்பதை 'pardon' என்று ஆங்கிலத்தில் கூற வேண்டும்.
- ஒருவர் தனி அறையில் இருக்கும் போது அவரை பார்க்க அவர் வீட்டுக்கு செல்ல நேர்ந்தால் முன் எச்சரிக்கை செய்யாமல் அல்லது கேட்காமல் உள்ளே போக கூடாது. ஆங்கிலத்தில் May i come in please என்று அனுமதி கேட்டே உள்ளே செல்ல வேண்டும்.
- மேற்கண்டவை தான் ஆங்கிலத்தில் உபசார மரியாதையான பதங்கள் நீங்கள் வாக்கியங்களை அமைக்கும் போது ஆங்கிலத்தின் இயற்கை தன்மையை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment