Friday, January 2, 2015

சிறு சொற்றொடர்கள்- Phrases


  • ஆங்கிலத்தில் முழு வாக்கியங்களுக்கு பதில் சிறிய சொற்றொடர்கள் மூலம் கருத்தை தெரிவிப்பார்கள் உதாரணமாக yes sir!, No sir, very good sir! போன்றவை. அம்மாதிரி சிறிய சொற்றொடர்கள் எவ்வளவு பிரபலம் என்றால் ஆங்கிலம் பேச, புரிந்துகொள்ள ஆசை உள்ளவர்கள் இவற்றை தெரிந்துகொள்ளவ்து மிகவும் அவசியம். இவை மிகவும் எளிதானவை ஆனால் இலக்கண விதிக்கு கட்டுப்படாதவை.        
    • Just coming - இதோ வருகிறேன் 
    • Very well - ரொம்ப நல்லது 
    • Fine/ Very good - நன்று/ நல்லா இருக்கிறது 
    • As you like/ As you please - உங்கள் விருப்பபடி/ சந்தோசம்  
    • Anything else - வேறு ஏதாவது?   
    • That's enough - அது போதும்  
    • Thanks for this honor - கௌரவித்தமைக்கு நன்றி 
    • OK - சரி 
    • Why not - ஏன் இல்லை 
    • Not a bit - கொஞ்சம் கூட இல்லை 
    • Take care - கவனமாக இருங்கள் 
    • See you tomorrow - நாளை சந்திக்கலாம் 
    • Yes, by all means - ஆம் அவசியம் 
    • That is too much - மிகவும் அதிகம் 
    • Yes! Sir - ஆம் ஐய்யா 
    • No not at all - இல்லை ஒருபோதும் இல்லை 
    • Never Mind/ Doesn't matter - கவலைபடாதே/ பரவாயில்லை   
    • Nothing else - ஒன்றுமே இல்லை 
    • Nothing special - விசேஷம் ஏதும் இல்லை 
    • Welcome - நல்வரவு  
    • Rest assured - நம்பி இருங்கள் 
    • Long time no see - பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதே 
    • good bye - சென்று வாருகிறேன்/ வாருங்கள்  
    • Bye bye - போய் வாருங்கள் 
    • Not the least- கொஞ்சம் கூட இல்லை  
  • இவை யாவும் வாக்கியங்களே ஆனால் முழுமையான வாக்கியங்கள் அல்ல. இருந்தாலும் முழு வாக்கியங்கள் போல பயன்படுகின்றன.    

கட்டளை சொற்கள்- Sentences of Command / order : 

    • I say stop - நில் / நிறுத்து 
    • Speak - பேசு 
    • Listen - கவனி 
    • Wait here - இங்கே காத்திரு 
    • Come here - இங்கே வா 
    • Look here - இங்கே கவனி 
    • Take it - பெற்று கொள் 
    • Come near - நெருங்கி வா 
    • Wait outside - வெளியே காத்திரு 
    • Go up - மேலே போ 
    • Go down - கீழே போ 
    • Get off - கிழே இறங்கு 
    • Be ready / get ready - தயாராக இரு / தயார் செய்து கொள் 
    • Keep Quit - அமைதி காக்கவும் 
    • Be Careful/ Be caution  - எச்சரிக்கையாக இரு / ஜாக்கிரதை 
    • Go Slowly/ Walk Slowly  - மெதுவாக செல்/ நட   
    • Go at once - உடன் விரைந்து செல் 
    • Stop here- இங்கே 
    • Go straight - நேராக போ 
    • Go away / get out - போய் விடு/ வெளியே போ  
Remember:

  •  Sentences of Command / order பிரிவில் எல்லா வாக்கியங்களும் கட்டளை வாக்கியங்கள். இவைகளை கொஞ்சம் முயன்றால் உபசார வாக்கியங்களாக மாற்ற முடியும். எப்படி எல்லா வாக்கியங்களுக்கு முன் சேர்த்து விட்டால் முதல் வாக்கியம் please Stop என்று ஆகும். அதாவது தயவு செய்து நில்லுங்கள் என்று பொருள். இதே போல எல்லா வாக்கியங்களும் மாறி மாறி அமையும். இதன் வினைசொற்கள் உபசாரமாக சொல்லும் பன்மையில் அமையும்.
  • நீங்கள் உங்கள் அதிகாரியிடமிருந்து விடுமுறை கேட்டோ அல்லது அதுபோல ஏதாவது ஒரு பிராத்தனை செய்யும் போதும் pleaseக்கு பதில் kindly உபயோகிக்கவும். உதாரணமாக (!) kindly grant me leave for one day. தயவு செய்து எனக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கவும்.  (!!)  Kindly look into the matter தயவு செய்து இந்த விஷயத்தை கவனிக்கவும் அம்மாதிரியான வாக்கியங்களுக்கு please உபயோகப்படுத்துவது சரியானதாக அல்ல. kindly என்பதே சரியானதாக இருக்கும் 
  • Don't என்பது Do Not எனும் வார்த்தையின் சுருக்கம். can't - can not 
  • 'கட்டளை' மற்றும் 'உபசார' வாக்கியங்களை மேலும் பிறகு வரும் பதிவில் காணலாம்.  

No comments:

Post a Comment